MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சொன்னதை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்! 100 பேருக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்!

சொன்னதை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்! 100 பேருக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்!

 அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக 18 நல வாரியங்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிதாக, இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டு e-Scooter வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 05 2026, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள்
Image Credit : our own

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நல உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு அரசால் 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம், மாதந்திர ஓய்வூதியம் போன்ற நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் இதர 18 நலவாரியங்களில் தற்போது 22,21,116 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். வாரியங்கள் துவங்கப்பட்டது முதல் இதுவரை 47,07,977 பயனாளிகளுக்கு 2,341 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

24
ஆட்டோ ஓட்டுநர்கள் மானியம்
Image Credit : our own

ஆட்டோ ஓட்டுநர்கள் மானியம்

மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2025 வரையிலான காலங்களில் 7,57,104 அமைப்புசாரா தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். இக்காலகட்டத்தில் 1,210 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 12,26,530 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 60 வயது பூர்த்தியடைந்த பதிவு பெற்ற 2,07,260 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1200 வீதம் ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,333 பெண் / திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூபாய் ஒரு இலட்சம் வீதம் மானியமாக 23.33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.! இந்த முறை புகுந்த விளாசப்போகுதாம்.! எந்தெந்த மாவட்டங்களில்!
Related image2
அடிதூள்! இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம் கொடுக்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!
34
கிக் தொழிலாளர்கள்
Image Credit : dipr

கிக் தொழிலாளர்கள்

தமிழ்நாடு முழுவதும் இணைய சார்ந்த சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் (Gig Workers) நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform based Gig Workers Welfare Board) 26.12.2023 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் 23,687 இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையிலும், கைபேசிக்கு மின்னூட்டம் (Charging) செய்வதற்கும், கழிப்பறை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

44
புதிய e-Scooter வாங்க மானியம்
Image Credit : Asianet News

புதிய e-Scooter வாங்க மானியம்

மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனத்திற்கு ரூ.5 இலட்சம் வரையிலான குழு காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்கும் செலவினத்தில் ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
உருளி வண்டிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
Recommended image2
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.! இந்த முறை புகுந்த விளாசப்போகுதாம்.! எந்தெந்த மாவட்டங்களில்!
Recommended image3
இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
Related Stories
Recommended image1
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.! இந்த முறை புகுந்த விளாசப்போகுதாம்.! எந்தெந்த மாவட்டங்களில்!
Recommended image2
அடிதூள்! இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம் கொடுக்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved