Free Laptop Scheme for Students: 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது வந்தது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்க இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் விழாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார்.


