திருப்பூர்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
தமிழக - கர்நாடக எல்லையில் எரிந்த நிலையில் இளைஞரின் பிணம் ஒன்று கிடந்தது.
தமிழக - கர்நாடக எல்லயான கேர்மாளம் வனத்தில் உடல் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதை பார்த்தவர்கள் இரு மாநில காவலாளர்களுக்கும் தகவல் அளித்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற கர்நாடக காவலாளர்கள், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு கொண்டுவந்து போடப்பட்டுள்ளாரா? என்ற கோணங்களில் இருமாநில காவலாளர்களும் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து, கர்நாடக மாநில இராமாபுரம் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
