தமிழ்நாடு கஞ்சா மாநிலமாக மாறிவருகிறது, உடனே 20 ஆயிரம் பேர் தேவை: அன்புமணி ராமதாஸ்
திமுக தனது தேர்தல் அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தற்போது கஞ்சா மாநிலமாக மாறிவருகிறது. போதைப் பொருட்களைத் தடுக்க 20,000 காவலர்களைத் தற்காலிகமாக நியமிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி, 50 லட்சம் கையெழுத்து வாங்கினால் ரத்தாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, திமுக தனது தேர்தல் அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
15,000 காலிப் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாவது எப்போது?
முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர் கஞ்சா அடித்துவிட்டு காவலரை கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவத்தைக் குறிப்பிட்டு கவலை தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துளார்.
"தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகச் சீரழிவையும், சட்டம் -ஒழுங்கு சீர்குலைவையும் கஞ்சா வணிகம் ஏற்படுத்தி வருகிறது; தனிப்பிரிவை அமைத்தாவது அதை தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சரிடம் நேரிலும் இதை தெரிவித்திருக்கிறேன்" எனவும் பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.
திங்கள் முதல் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கும் ஒரு ரயில்... சென்னை மெட்ரோ அறிவிப்பு
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D