இனி சனிக்கிழமைகளிலும் லைசென்ஸ் பெறலாம்..! வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட தமிழக அரசு அனுமதி
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் இனி லைசென்ஸ் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

சனிக்கிழமையிலும் லைசென்ஸ்
வட்டார போக்குவரத்து அலுவலகம் சனிக்கிழமை செயல்படாத காரணத்தால் வார நாட்களில் பணிக்கு செல்பவர்கள் பைக் மற்றும் கார்களுக்கான லைசென்ஸ் பெற முடியாத நிலையானது இருந்து வந்தது. இந்தநிலையில் சனிக்கிழமைகளிலும் வட்டார போக்குவரத்து அலுலவகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் வார நாட்களில் மட்டும் வட்டார அலுவலகம் செயல்படுவதால் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து லைசென்ஸ் பெற வேண்டிய நிலையானது இருந்து வந்தது.
குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிக அளவிலான ஓட்டுநர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாலும் அடுத்து பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் பெற காலதாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்ததையடுத்து சனிக்கிழமைகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட தமிழக அரசு உத்தரவு விட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
இந்தநிலையில் வட்டார போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) அலுவலகங்களுக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சனிக்கிழமையன்று போக்குவரத்து அலுவலகங்களில் சேவையான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பணிகள் வார நாட்களில் நடைபெறுவது போல் சனிக்கிழமையிலும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
கோவையில் புதுமண தம்பதிக்கு தக்காளி, வெங்காயத்தை அன்பளிப்பாக வழங்கிய விவசாயிகள்