விலையில்லா லேப்டாப்பில் இருந்து ஜெயலலிதா, இபிஎஸ் படம் நீக்கம்..!அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு
விலையில்லா மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி
மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச பஸ் பாஸ், இலவச சீருடை, இலவச மிதிவண்டி, என அடிக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில், அதற்கு மேலும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பயணளிக்கும் வகையில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் போது ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து காமராஜர் பிறந்த தினத்தையொட்டி இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் கிராம்ப்புற மாணவர்கள் மிகுந்த பயன் அடைந்தனர், அந்தவகையில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஆளுநர் மாளிகையில் நீட் மசோதா..! காலம் தாழ்த்தும் கவர்னர்.. சட்டபேரவையை அவமதிக்கும் செயல் -அப்பாவு
இபிஎஸ் படத்தை நீக்க உத்தரவு
விலையில்லா மடிக்கணினிகளில், Wallpaper & Screen Lock ஆகியவற்றில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இடம்பெற்று இருக்கும் அந்த படங்களை நீக்க தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில், அவை பள்ளிக்கல்வித்துறையிலேயே தேங்கிக்கிடக்கிறது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால், மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படத்தை அகற்றுமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் படங்களை அகற்றிய பின், விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்
மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...