மகளிர் உரிமைத் தொகை.. காஞ்சிபுரம் செல்லும் முதல்வர் - உங்க விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் என்ன? மெசேஜ் எப்போ வரும்?
திமுக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இரண்டு முக்கியமான வாக்குறுதிகள் தான், மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் மற்றும் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவது. தற்பொழுது இந்த இரு திட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை துவங்க உள்ளது தமிழக அரசு. மேலும் இந்த மகளிர் உரிமைத் தொகை எந்தெந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த அறிக்கையை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட, ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
தற்பொழுது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில் 1.065 கோடி மகளிர், இந்த உரிமை தொகையை பெற தகுதி பெற்றுள்ளார்கள் என்ற தகவலை சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது.
அரசு குறிப்பிட்டிருந்த அனைத்து தர நிலைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல அரசு நிர்ணயித்த தரநிலைகளை பூர்த்தி செய்யாதவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலையானது வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்பட்டால் என்ன செய்வது?
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்திகளை பெறும் விண்ணப்பதாரர்கள், அந்த குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள்ளாக இ-சேவை மையத்தை அணுகி, மேல்முறையீடு செய்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்த முப்பது நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் மகளிர் உரிமை வழங்கும் விழா துவங்க உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் காஞ்சிபுரம் செல்ல உள்ளார்.
தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி: அர்ச்சகராகும் 3 பெண்கள்!