மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Magalir Urimai Thogai: தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கபப்ட்டு இருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் புதிதாக விண்ணப்பித்து இருக்கின்றனர். அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
இந்நிலையில், விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, ''மகளிர் உரிமைத் தொகை வேண்டி ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியானவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் விண்ணப்பப் படிவம் பெறப்பட்டு அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.
இனி வீட்டில் இருந்தே போட்டி தேர்வுக்கு இலவசமாக படிக்கலாம்: தமிழக அரசு அதிரடி
இன்னும் 3 மாதத்தில்...
தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, ''முதல்வர் உத்தரவின்பேரில் தகுதியானவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பங்கள் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
இப்போது ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆனால் ஓய்வூதியம் பெறும் அனைத்து பெண்களுக்கும் வசதியாக இல்லை. சொற்பமாக வரும் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு சொந்த வீடு கூட இல்லாத பெண்கள் ஏராளம் உள்ளனர். ஆகையால் ஓய்வூதியம் வாங்கினாலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டு : ஆன்லைன் vs ஆஃப்லைன் - எதில் அப்ளே பண்ணுனா ஈஸியா கிடைக்கும்?
