TN Govt : அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு செலவின தொகையை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி, 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!