9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு..! என்ன காரணம் தெரியுமா?
ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 8 ஆம் தேதி சென்னை கோவை, திருப்பூர், நீலகிரி கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமறை அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கிய பண்டிகை செப்டம்பர் 8 ஆம் தேதி வரை, 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த திருநாளையொட்டி, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, மலையாள மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ண பூக்கள், கோலங்களால் அலங்கரித்து மகிழ்வர். பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் கொண்டாடப்படும். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் விடுமுறையும் அளிக்கப்படும்.
9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் இந்தாண்டு தமிழகத்தில் சென்னை கோவை, திருப்பூர், நீலகிரி கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வரும் 8 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையாக உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.இதன்படி செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகை விடுமுறையை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஓணம் பண்டிகை களைக்கட்டத் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரிகள் கிடையாது..