Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவர்களிடம் விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம் வசூலிப்பது ஏன்.? எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த தமிழக அரசு

 கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500/-ம் பிற மாவட்டங்களில் ரூ.200/-ம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tamil Nadu government explains why it charges school students for sports training
Author
First Published Apr 29, 2024, 7:14 AM IST

கோடை கால சிறப்பு பயிற்சி

கோடை கால சிறப்பு பயிற்சியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரிடம் போட்டோ எடுத்த உதயநிதியிடம் வேறு என்ன எதிர்பார்ப்பது-விளாசும் இபிஎஸ்

மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம்

இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/-ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு. கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட். கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ.2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது.

கட்டணம் நிர்ணயம் ஏன்.?

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500/-ம் பிற மாவட்டங்களில் ரூ.200/-ம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் ரீதியான பயிற்சி

இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி. விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும். 2013-ஆம் வருடம் முதல் 2019 ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது.

இதற்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ. 15.000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன்18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குளு குளு ஊட்டியையும் விட்டு வைக்காத வெயில்... 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான வெப்பநிலை- சுற்றுலா பயணிகள் ஷாக்

Follow Us:
Download App:
  • android
  • ios