Asianet News TamilAsianet News Tamil

Republic Day procession :தமிழக ஊர்தி நிராகரிப்பு.. பிரதமர் உடனே தலையிட வேண்டும்.. முதலைமச்சர் கடிதம்..

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தழிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

Tamil Nadu CM MK Stalin wrote letter to PM
Author
Tamilnádu, First Published Jan 17, 2022, 5:40 PM IST

குடியரசு தின விழாவையொட்டி வரும் 26ஆம் தேதி புது டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிப்பு என தெரிய வந்துள்ளது. 

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதி போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது குடியரசு தினவிழா அணிவகுப்பில் தழிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. எனவே பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக மாநில அதிகாரிகள் 3 முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.  திருத்தங்கள் செய்து சமர்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசு நிராகரித்திருப்பது ஏற்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 4 ஆவது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலே, குடியரசு தின அணிவகுப்பு பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்தி மறுக்கப்பட்டது எமாற்றமளிக்கிறது என்று தனது வருத்தத்தை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று எம்.பி. கனிமொழி  தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios