TN 11th Exam Result : 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. இந்த முறையாவது மாணவிகளை விட மாணவர்கள் அதிகமா?

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த தேர்வு 3,302 மையங்களில் நடைபெற்றது. 

Tamil Nadu Class 11 results released tvk

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியாகியுள்ளது.  வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த தேர்வு 3,302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில்,  4,26,821 மாணவிகளும், 3,84,351 மாணவர்களும் அடங்குவர். 

இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.17% சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,04,143 தேர்வாகியுள்ளனர். இது 94.69 சதவீதமாகும். மாணவர்கள் 3,35,396 தேர்வாகியுள்ளனர். இது 87.26 சதவீதம் தேச்சியாகும்.  அந்த வகையில் மாணவர்களை விட 7.43 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

Tamil Nadu Class 11 results released tvk
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

Tamil Nadu Class 11 results released tvk

100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை
 

Tamil Nadu Class 11 results released tvk
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios