தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் இயற்கை, வரலாறு, ஆன்மிகம், கடற்கரை, மலை என பல்வேறு சிறப்புகளை கொண்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களின் முழுமையான பட்டியலை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு என்றாலே கோயில்கள் மட்டுமல்ல, மலைகள், கடற்கரைகள், அருவிகள், வரலாற்றுச் சின்னங்கள், வனப்பகுதிகள், அரண்மனைகள் என ஒவ்வொரு மாவட்டமும் தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. ஒரே மாநிலத்துக்குள் கடற்கரை முதல் மலைப்பகுதி வரை, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் முதல் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள் வரை இத்தனை வகையான சுற்றுலா இடங்கள் இருப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிறப்பு.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஆன்மிகம், வரலாறு, இயற்கை, சாகசம் என ஒவ்வொரு மாவட்டமும் தனக்கென ஒரு சுற்றுலா அடையாளத்தை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்களாக சென்னை, மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், ஊட்டி, கொடைக்கானல், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா இடங்கள்
| வ.எண் | மாவட்டம் | பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் |
| 1 | கோயம்புத்தூர் | மருதமலை முருகன் கோவில், ஈஷா யோக மையம் – ஆதியோகி, சிறுவாணி அணை, கோவை குற்றாலம், ஆழியாறு அணை, வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், வெள்ளியங்கிரி மலை, ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம், கோவை ஈரநிலப் பூங்கா, உக்கடம் பெரியகுளம், குறிச்சி ஏரி, அமராவதி அணை, திருமூர்த்தி அணை. |
| 2 | அரியலூர் | கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கீழையூர் இரட்டைக் கோவில்கள், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம், கீழப்பழுவூர் புதைபடிவ அருங்காட்சியகம், கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் புத்தர் சிலைகள், உடையார்பாளையம் அரண்மனை, அணைக்கரை அணை. |
| 3 | செங்கல்பட்டு | மாமல்லபுரம், கடற்கரை கோவில், முதலைப் பண்ணை (Madras Crocodile Bank), முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் , புலிக்குன்றம் ஏரி. |
| 4 | சென்னை | மெரினா கடற்கரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கபாலீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம் எழும்பூர், வள்ளுவர் கோட்டம், விவேகானந்தர் இல்லம், கிண்டி தேசியப் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பார்த்தசாரதி கோவில் செம்மொழிப் பூங்கா, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. |
| 5 | கடலூர் | பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், சில்வர் பீச், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில், கொடிக்கரை கடற்கரை, கெடிலம் ஆறு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். |
| 6 | தருமபுரி | ஒகேனக்கல் அருவி, மேட்டூர் அணை, தீர்த்தமலை, அதியமான் கோட்டை, மல்லிகார்ஜுனர் கோவில், காவேரி ஆறு, முத்து மலை, பென்னாகரம், நாகாவதி அணை. |
| 7 | திண்டுக்கல் | கொடைக்கானல், தூண் பாறை, பைன் வனப்பகுதி, பிரையன்ட் பூங்கா,ன் திண்டுக்கல் மலைக்கோட்டை, பழனி முருகன் கோவில், சிறுமலை ஏரி சாணார்பட்டி கன்னிமார் கோவில் தாண்டிக்குடி, குதிரையாறு அணை, அம்மையநாயக்கனூர் கோட்டை. |
| 8 | ஈரோடு | பவானிசாகர் அணை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி அம்மன் கோவில், கொடிவேரி அணை, பவானி கூடுதுறை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில். |
| 9 | கள்ளக்குறிச்சி | கல்வராயன் மலை, பெரியார் நீர்வீழ்ச்சி, கோமுகி அணை, மணிமுக்தா அணை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவில், மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயம். |
| 10 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில். |
| 11 | கரூர் | கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாயனூர் கதவணை, வெண்ணைமலை முருகன் கோவில், புக்குளி மலை, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், புகழூர் வேலாயுதசுவாமி கோவில், திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் கோவில். |
| 12 | கிருஷ்ணகிரி | கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி ஏரி, மகாராஜகடை மலை, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை கோட்டை, கெலவரப்பள்ளி அணை. |
| 13 | மதுரை | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி நினைவு அருங்காட்சியகம், அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் முருகன் கோவில், வைகை அணை. |
| 14 | மயிலாடுதுறை | மயூரநாதசுவாமி கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் |
| 15 | நாகப்பட்டினம் | வேளாங்கண்ணி பசிலிக்கா, நாகூர் தர்கா, நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில், கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், டச்சுக் கோட்டை, தரங்கம்பாடி, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம் கடற்கரை |
| 16 | கன்னியாகுமரி | கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தர் பாறை நினைவிடம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, சுசீந்திரம் தாணுமாலயன் கோவில். |
| 17 | நாமக்கல் | நாமக்கல் மலைக்கோட்டை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், கொல்லிமலை, ஆகாய கங்கை அருவி, அரப்பளீஸ்வரர் கோவில், மாசிலா அருவி, கொல்லிப்பாவை கோவில் |
| 18 | பெரம்பலூர் | ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் |
| 19 | புதுக்கோட்டை | சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, குடுமியான்மலை, ஆவுடையார்கோவில், நார்த்தாமலை, கொடும்பாளூர் மூவர் கோவில், புதுக்கோட்டை அரண்மனை |
| 20 | ராமநாதபுரம் | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை, அப்துல் கலாம் நினைவிடம், கோதண்டராமர் கோவில், குருசடை தீவு |
| 21 | ராணிப்பேட்டை | வாலாஜா பேட்டை அமிர்தபுரீஸ்வரர் கோவில், இரத்தினகிரி பாலமுருகன் கோவில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில், சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில், காவேரிப்பாக்கம் ஏரி, பாலாறு, வாலாஜா தர்கா |
| 22 | சேலம் | ஏற்காடு, ஏற்காடு ஏரி, கிளியூர் அருவி, சேர்வராயன் கோவில், மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, 1008 லிங்கம் கோவில், ஆத்தூர் |
| 23 | சிவகங்கை | செட்டிநாடு அரண்மனை, கானாடுகாத்தான், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாதர் கோவில், சிராவயல் மஞ்சுவிரட்டு, நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் |
| 24 | தென்காசி | குற்றாலம் அருவிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, பாபநாசம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் |
| 25 | தஞ்சாவூர் | தஞ்சை பெரிய கோவில், தஞ்சாவூர் அரண்மனை, சரஸ்வதி மகால் நூலகம், கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், திருவையாறு, மணிமண்டபம், தஞ்சாவூர் |
| 26 | தேனி | மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, குச்சனூர் சனீஸ்வரர் கோவில் |
| 27 | திருவள்ளூர் | பழவேற்காடு ஏரி (Pulicat Lake), பழவேற்காடு டச்சுக் கல்லறை, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், பூண்டி நீர்த்தேக்கம், திருவள்ளூர் வீரராகவர் கோவில், புலிக்காட் பறவைகள் சரணாலயம், கும்மிடிப்பூண்டி ஏரி |
| 28 | திருவாரூர் | திருவாரூர் தியாகராஜர் கோவில், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள், முத்துப்பேட்டை கடற்கரை, கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருக்குவளை தியாகராஜர் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் |
| 29 | தூத்துக்குடி | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மணப்பாடு கடற்கரை, கழுகுமலை, காயல்பட்டினம் கடற்கரை, எட்டயபுரம் பாரதி மணிமண்டபம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, முத்துநகர் கடற்கரை |
| 30 | திருச்சி | மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், முக்கொம்பு, கல்லணை, சமயபுரம் மாரியம்மன் கோவில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மேலணை |
| 31 | திருநெல்வேலி | நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவில், பாபநாசம், மணிமுத்தாறு அருவி, மணிமுத்தாறு அணை, அகஸ்தியர் அருவி, களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் |
| 32 | திருப்பத்தூர் | ஏலகிரி மலை, புங்கனூர் ஏரி, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, சுவாமிமலை மலை, ஏலகிரி இயற்கைப் பூங்கா, வாணியம்பாடி பெரிய மசூதி, ஆம்பூர் கோட்டை |
| 33 | திருப்பூர் | திருமூர்த்தி அணை, திருமூர்த்தி மலை, அமராவதி அணை, அமராவதி முதலைப் பண்ணை, உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி அருவி, ஆழியாறு அணை |
| 34 | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மலை, ரமண மகரிஷி ஆசிரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாது மலை, பர்வதமலை, சேயாறு கல்யாண மண்டபம் |
| 35 | நீலகிரி | ஊட்டி, ஊட்டி ஏரி, தொட்டபெட்டா சிகரம், குன்னூர், டால்பின்ஸ் நோஸ், பைக்காரா ஏரி மற்றும் அருவி, முதுமலை புலிகள் காப்பகம் |
| 36 | வேலூர் | வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக் கோவில், அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில், பாலமதி மலை, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் |
| 37 | விழுப்புரம் | செஞ்சி கோட்டை, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மரக்காணம் கடற்கரை, திருவக்கரை தேசிய புவியியல் பூங்கா, திருவக்கரை கல்மரப் பூங்கா, பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில், மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் |
| 38 | விருதுநகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சதுரகிரி மலை, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த இடம், இராஜபாளையம் அய்யனார் அருவி, குலசேகரப்பட்டி பெரியகோவில், கன்னிசேரி புதூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் |


