Asianet News TamilAsianet News Tamil

Annamalai : தமிழகத்தில் ஆம் ஆத்மி கூண்டோடு காலி.!! சைலண்டாக தட்டித்தூக்கிய அண்ணாமலை

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக களம் இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் உள்ளிட்ட மாவட்ட தலைவர்களை பாஜகவிற்கு இழுத்து அதிரடி காட்டியுள்ளது.

Tamil Nadu Aam Aadmi Party functionaries joined the BJP in the presence of Annamalai KAK
Author
First Published Jul 11, 2024, 1:49 PM IST | Last Updated Jul 11, 2024, 1:49 PM IST

தமிழகத்தில் பாஜக

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் தனித்து ஒரு இடங்களை கூட பெற முடியாத நிலை உள்ளது. கூட்டணி கட்சிகளின் உதவியோடே ஒரு சில எம்எல்ஏக்களை பாஜக பெற்றுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பல்வேறு திட்டங்களை தேசிய தலைமை வகுத்துள்ளது. இதுவரை இருந்த தலைவர்கள் அமைதியாக அரசியல் செய்து வந்த நிலையில், அதிரடி அரசியலுக்காக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை களம் இறக்கியது. அண்ணாமலையும் திராவிட கட்சிகளுக்கு போட்டியே நாங்கள் தான், தமிழகத்தில் எதிர்கட்சி பாஜக தான் என்ற தோற்றத்தை உருவாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக,

ADMK EPS : எடப்பாடியை புறக்கணித்தார்களா அதிமுக தொண்டர்கள்.! விக்கிரவாண்டி தேர்தலில் நடந்தது என்ன.?

Tamil Nadu Aam Aadmi Party functionaries joined the BJP in the presence of Annamalai KAK

அண்ணாமலையும் தமிழக பாஜகவும்

இனியும் கூட்டணியில் இருந்தால் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகிவிடும் என நினைத்து கூட்டணியில் இருந்த  திடீரென விலகியது. இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது.  இருந்த போதும் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை கண்டிப்பாக தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை வளக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கலாம் என அண்ணாமலைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுத்த அண்ணாமலை தற்போது,

Tamil Nadu Aam Aadmi Party functionaries joined the BJP in the presence of Annamalai KAK

ஆம் ஆத்மி கட்சியை காலி செய்த பாஜக

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் முதல் மாவட்ட தலைவர்கள் வரை தங்கள் அணிக்கு தட்டி தூக்கியுள்ளது.இதற்கான இணைப்பு நிகழ்வு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணாமலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஓபிசி மோர்ச்சா மாநில தலைவர் தமிழ்நெஞ்சம், சரவணன், மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், ருக்குமாங்தன், செந்தில் பிரபா உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் அண்ணாமலை வரவேற்றார்.

அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

Tamil Nadu Aam Aadmi Party functionaries joined the BJP in the presence of Annamalai KAK

அண்ணாமலை உத்தரவு

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் திரு T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios