Asianet News TamilAsianet News Tamil

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்..

மாநில பாட திட்டத்தின் கீழ் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
 

Tamil Nadu 12th Result 2022 At Tnresults.nic.in. Know How to Check TN 12th exam result date here
Author
Tamilnádu, First Published Jun 20, 2022, 10:08 AM IST

மாநில பாட திட்டத்தின் கீழ் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன் படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90.07 % மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93. 76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி, பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவிட்டால் எஸ்.எம்.எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும்.  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணிக்கு இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios