Asianet News TamilAsianet News Tamil

வெளியானது +2 ரிசல்ட்... 92.1% தேர்ச்சி... இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி...

Tamil Nadu 12th Result 2017 TN Board HSC plus 2 Results to be declared
tamil nadu-12th-result-2017-tn-board-hsc-2-results-to-b
Author
First Published May 12, 2017, 10:10 AM IST


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுவில் 92.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2தேர்வு எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு  முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார்.

மாணவர்கள், ((www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in )) இணையதளத்திலும் ஒவ்வொரு பாடத்திலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை காணலாம்.

இந்த ஆண்டு முதல் மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு, இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.

82.3 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5.2%  மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1813 பள்ளிகளில் 292 அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

1123 பேர் வேதியலில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

3656 பேர் கணிதத்தில் 200  மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

187 இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வேதியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம்  

தேர்ச்சி விகித்தத்தில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios