நடிகர் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் நண்பராக நடித்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், திமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயார் என தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த நடிகர் பெஞ்சமின்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தநிலையில் விஜய்யின் நண்பராக நடித்த பெஞ்சமின் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு, பார்த்திபன் - முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான 'வெற்றிகொடிக்கட்டு' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் பெஞ்சமின்,

 இவர் 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த 'திருப்பாச்சி' படத்தில் அவருக்கு நண்பனாக கண்ணப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. 

தேர்தல் பிரச்சாரத்திற்கு தயார்

மேலும் தனது சக நடிகர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது உதவி செய்ய கோரி பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன்னால் முடிந்த அளவிற்கு சக நடிகர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் பெஞ்சமின் செய்து வந்தார். இந்தநிலையில் அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

நேற்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு செய்து வருவதாக கூறிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய தயார் என கூறினார். 

இதையும் படியுங்கள்

சூடு பிடிக்கும் தேர்தல்! போட்டி போட்டு களத்தில் இறங்கும் திமுக-அதிமுக.! தேர்தல் அறிக்கையில் வெல்லப்போவது யார்?