தருமபுரியில், மாணவ, மாணவியருக்கான தமிழ் கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் வரும் நவம்பர் 2-ஆம் தேதி நடக்கவுள்ளன..
தருமபுரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், +1 மற்றும் +2 மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் வரும் நவம்பர் 2-ஆம் தேதி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கவுள்ளன.
ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றிதழுடன் பங்கேற்கலாம்.
முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அன்று மாலையே போட்டி முடிவுகளும் அறிவிக்கப்படும். முதல் பரிசு பெறுவோர் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.
போட்டிகளுக்கான தலைப்பு போட்டி நாளன்று அறிவிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் பள்ளியில் இருந்து கடிதம் வாங்கி வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
