ஜம்மு - காஷ்மீர் எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட இருவர் வீரமரணமடைந்தனர். 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியானா அருகே மறைந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த 3 வீரர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 

இதில், தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. 

பாகிஸ்தான் ராணுவம் கடந்த 51 நாட்களில் மட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இதுவரை 26 முறை இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம், மெந்தார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்துள்ளார்.