தாம்பரம் - திருநெல்வேலி; சென்ட்ரல் - திருச்செந்தூர்; இரு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென்னக ரயில்வே!

Special Trains : சென்னை தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tambaram tirunelveli and thiruchendur southern railways operates 2 special trains ans

ஏற்கனவே தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வந்தது. அதேபோல மிக நீண்ட வார இறுதியோடு இணைந்து தீபாவளி திருநாள் வந்ததால், விழா முடிந்து மீண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக சில சிறப்பு ரயில்களையும் தென்னக ரயில்வே இயக்கியது. இந்நிலையில் சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் ரயில்களை இயக்க தென்னகை ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

அதன்படி நாளை நவம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் அதிவேக சிறப்பு ரயிலானது, நவம்பர் 7ம் தேதி காலை 8.30 மணி அளவில் திருநெல்வேலி சென்று அடைகிறது. அதே போல நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை திருச்செந்தூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் அதிவேக சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகளும் தற்பொழுது தொடங்கி இருக்கிறது. இந்த ரயிலில் இரண்டு ஏசி 3 டயர் கோச்சுக்களும், ஏழு ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகளும், ஏழு ஜென்ரல் செகண்ட் கிளாஸ் கோச்சுகளும், இரண்டு செகண்டு கிளாஸ் கோச்சுகளும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேற லெவில் பாம்பன் புதிய தூக்குபாலம்! லிப்ட் வசதியுடன் செங்குத்துப் பாலம்! கடலிலேயே இரண்டு மாடி கட்டிடம்!

தென்னக ரயில்வே இன்று நவம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி வண்டி எண் 06099 நாளை நவம்பர் மாதம் 6ம் தேதி இரவு பத்து முப்பது மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 

அதேபோல வண்டி எண் 06100 நவம்பர் 7ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு ஆறுமுகநேரி, நாசரேத்து, ஸ்ரீவைகுண்டம், சேதுங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். 

சஷ்டி விழா தமிழக அளவில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கூடுதலாக மக்கள் கூட்டம் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தென்னை ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் இந்த இரண்டு தினங்களை தாண்டி பிற தினங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதையும் தென்னக ரயில்வே இன்று வெளியிடவில்லை.

School Holiday: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை! இனி அடுத்த வாரம் தான் ஸ்கூல்! என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios