தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

தாம்பரத்தில் கடந்த 2008 ஆம் ஆடு பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவூநீர் அகற்று வாரியம் மூலம் 160.97 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பணி இன்னும் நிறைவடையவில்லை. தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவையில் இன்று தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, தாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, தாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுகிளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக கூறினார். தாம்பரம் மேற்கு பகுதியில் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.