யார் தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தாம்பரம் மாநகராட்சியில் 17 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
புதிதாக உருவாக்கப்பட்ட சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 55 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை தனது வசமாக்கியது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தாம்பரம் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டு, முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இம்முறை சந்தித்துள்ளது. மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு, முன்பு மொத்தம் 213 வார்டுகள் இருந்தன. ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 70 வார்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கவுன்சிலர் பதவியைப் பிடித்து மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுக கடுமையாக போராடி கொண்டிருக்கிறது. மொத்தம் சுயேச்சைகள் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக இடையே மட்டுமே கடுமையான போட்டி ஏற்பட்டது. மேயர் பதவி பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 4, 12, 13, 27, 31, 51 ஆகிய 6 வார்டுகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொது வார்டான 32-வது வார்டில் திமுக வேட்பாளராக ஆதிதிராவிட பெண் வசந்தகுமாரியை நிறுத்திவிட்டது.
திமுக எம்பியான ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி.காமராஜ் 30-வது வார்டில் போட்டியிடுகிறார். திமுகவைப் பொறுத்தவரை 31 வது வார்டில் போட்டியிடும் சித்ராதேவி, மற்றும் 32 வது வார்டில் போட்டியிடும் வசந்தகுமாரி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெற்றி பெற்றால் மேயர் பதவியை குறிவைத்து, கேட்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 70 வார்டுகள் உள்ளன. அதில், திமுக கூட்டணி 55 வார்டுகளிலும், அதிமுக 8 வார்டுகளில், சுயேச்சை 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
