Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் கொரோனா.. அச்சத்தில் மக்கள்.. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும்.. ராதாகிருஷ்ணன் கடிதம்..

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

Take action to control the corona Spread level- Health Secretary Radhakrishnan to all collectors
Author
Tamilnádu, First Published Jun 4, 2022, 11:54 AM IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையர், மருத்துவ அதிகாரிகளுக்கு மீண்டும் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்யவேண்டும் .

மேலும் படிக்க: நான்காம் அலை தொடங்கியதா ..? மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..? இன்றைய பாதிப்பு நிலவரம்..

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தியேட்டர், உணவகங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனே தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கொரோனா உறுதியானால், அவர்களை மருத்துவ ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கலாம். கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அச்சறுத்தும் கொரோனா.. முக்கிய நகரங்களில் மீண்டும் வேகமெடுக்கும் பரவல்.. கட்டுப்பாடுகள் விதிக்க உத்தரவு..

Follow Us:
Download App:
  • android
  • ios