அச்சறுத்தும் கொரோனா.. முக்கிய நகரங்களில் மீண்டும் வேகமெடுக்கும் பரவல்.. கட்டுப்பாடுகள் விதிக்க உத்தரவு..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நாட்டில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: அதிர்ச்சி!! வேகமெடுக்கும் கொரோனா.. ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது..
கடந்த சில நாட்களாக, தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகும் தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கொரோனா பரவல் சில மாநிலங்களில், மீண்டும் வேகம் எடுத்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,134 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.
மும்பையில் மட்டும் 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்தமாறு மாவட்ட மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு மாநில சுகாதாத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தியேட்டர்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணியவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!