த.வெ.க. என்ற கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க ஓர் அணியை அமைத்து, அதற்கான நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

த.வெ.க. என்ற கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க ஓர் அணியை அமைத்து, அதற்கான நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

"மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு இன்று நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Scroll to load tweet…

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த திருமதி சி. விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த திருமதி எஸ்.என். யாஸ்மின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவையைச் சேர்ந்த திரு. வி. சம்பத்குமார் மாநிலப் பொருளாளராகவும் மதுரையைச் சேர்ந்த திரு. ஏ. விஜய்அன்பன் கல்லணை மற்றும் எம்.எல்.பிரபு ஆகியோர் மாநிலத் துணைச் செயலாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

"இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.