சாலை விதிகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் ஓட்டுநர்களிடம் அபராத தொகை பெற ஸ்வைப்பிங் மிஷின் பயன்படுத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிந்திருக்கின்றனரா? கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் போட்டுள்ளனரா? உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து போலீசார் சோதனையிட்டு, அபராதம் விதித்து வருகின்றனர்.

இதற்காக, போக்குவரத்து போலீசார் ஒவ்வொரு சிக்னல்லிலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகள் மீறப்படுபவர்கள் மீது குறிப்பிட்ட அபராதத் தொகையை வாகன ஓட்டிகள், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதற்காக, வாகன ஓட்டிகள் அபராத தொகையினை பணமாக செலுத்தி வந்தனர். இந்த நிலையில், ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் பெற போக்குவரத்து போலீஸ் முடிவு செய்துள்ளது. 

இதன் முதல்கட்டமாக எஸ்.பி.ஐ. சார்பில் 100 ஸ்வைப்பிங் இயந்திரங்கள், சென்னை மாநகர போக்குவரத்து போலீசுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து நேரடியாக அபராதத் தொகையை பெற முடியும்.