Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் துப்பரவு பணியாளர்களின் சம்பளத்தில் கமிஷன் கேட்ட ஊராட்சி தலைவர்

துப்பரவு பணியாளர்களின் சம்பளத்தில் கமிஷன் கேட்ட ஊராட்சி தலைவரிடம் நியாயம் கேட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியதுடன் கணவரை விட்டு மிரட்டிய கொடூரம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
 

sweeping workers make allegations against rural president in tirunelveli
Author
First Published Oct 3, 2022, 7:55 PM IST

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் கீழநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்  தலைவர் அனுராதா தலைமையில்  நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு ஊராட்சி தலைவர் பதிலளித்தார். இதனிடையே ஊராட்சியில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை தலைவி தரப்பில் வாங்கி வைத்து கொண்டதாகவும் குற்றச் சாட்டை தெரிவித்தனர்.   

குழந்தை பிறந்து 10 நாட்களில் பணிக்கு திரும்பிய தாம்பரம் மேயர் - பொதுமக்கள் நெகிழ்ச்சி

உடனடியாக வங்கி பாஸ் புத்தகத்தை திருப்பி தர வேண்டும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய கிராம ஊராட்சி தலைவரின் கணவர் ரவி முருகன் பாஸ்புக் புத்தகத்தை வாங்கி வைக்கவில்லை என மிரட்டும் தொணியில் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பாஸ்புக்கை வாங்கி வைத்ததை ஒப்புக் கொண்ட ஊராட்சி தலைவி தரப்பினர்  அதிகாரிகள் மூலம்  தூய்மை பணியாளர்களிடம் அதை ஒப்படைத்தனர். 

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தூய்மை பணியாளர்கள்  தற்காலிகமாக பணி செய்து வரும் தங்களிடம் முன்னரே ராஜினாமா கடிதம் வாங்கி வைத்து விட்டனர். தற்போது பணிக்கு வர வேண்டாம் என்கின்றனர். தங்களுக்கு பணி வழங்க வேண்டும், முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளனர் 

நெல்லையில் போதையில் தகராறு செய்த கணவனை விஷம் வைத்து கொன்ற பெண்

கீழநத்தம் ஊராட்சி 25 ஆயிரத்திற்கும் மேல்  மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சியாகும். அனுராதா தலைவரான பிறகு அவரது கணவர் மருத்துவர் ரவி முருகன் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. கூட்டத்தில் அவர் துப்பரவு பணியாளர்களை மிரட்டும் காட்சிகள் அதனை நிரூபிக்கும் விதமாக உள்ளது. மாதம் வெறும் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் துப்பரவு பணியாளர்களிடம் ஊராட்சி தலைவி கமிஷன் பெறுவதோடு அதை தட்டி கேட்ட ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios