Swami Nithyananda expressing Lord Kalabhairava
சர்வதேசங்களிலும் உள்ள மனிதர்கள் ஆன்மீக வழி அமைதி தேடி இந்தியாவிற்கு படையெடுக்கிறார்கள். அதிலும் தமிழகத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்த நிலையில் இந்திய சாமியார்களின் பவித்ரத்தை கேள்விக்குறியாக்கியது நித்யானந்தாவின் லீலை. ஒருகாலத்தில் கோலிவுட்டை கலக்கிய நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் சீடரானார். அவருடன் நித்தி நடத்திய களிபேராட்டம் சர்வதேசத்தையும் தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்தது.
இதன் பிறகு கைது, ரெய்டு, மக்கள் போராட்டம், மீடியாக்களின் மிக கடும் விமர்சனங்கள் என்று மோசமான கால கட்டங்களை சந்தித்த நித்தி ஒரு வழியாக வெளியே வந்தார். ஆனால் வழக்கு நடந்தது. அந்த வீடியோ ஒரு பொய்யான, புனையப்பட்ட வீடியோ என்று நித்தி தரப்பு வாதாடியது.
இந்த சம்பவத்துக்கு ரஞ்சிதா நித்தியை விட்டு நகர்வார் என்று எதிர்பார்த்தால் அவரோ மேலும் இறுக்கமாக அங்கே ஐக்கியமானார்.
.jpg)
சில வருடங்கள் அமைதியாக கழிந்த நித்தி அதன் பிறகு மதுரை ஆதினத்தின் இளையபட்டம் என்று சொல்லி நடத்திய சீன்கள் தேசத்தை அதிர வைத்தன. அதேபோல் திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் மலை மற்றும் சில பகுதிகளை திடீர் திடீரென ஆக்கிரமித்து நித்தியின் டீம் கூத்தடிப்பதும், போலீஸ் அவர்களை விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி உள்ளது.
.jpg)
இந்நிலையில், ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் படுக்கையை பகிர்ந்த வீடியோ உண்மையானதே என்று அதிகாரப்பூர்வமாக ஆயவறிக்கை சொல்லியுள்ளது. இது நித்திக்கு மறுபடியும் நித்தியகண்டத்தை கொடுக்குமென்று பார்த்தால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. மேலும் இந்த விஷயம் பெரிய அளவில் தலைதூக்கவுமில்லை.
இந்நிலையில், காலபைரவர் தரிசனம் எனும் பெயரில் சிறுத்தை தோல் போர்த்திய உடம்பில், மிகப்பெரிய ஜடாமுடியை விரித்துப் போட்டபடி உடம்பெல்லாம் ருத்திராட்சங்களும், மணிகளும் தொங்க செம்ம போட்டோ செஷன் ஒன்றை நடத்தி, தன் பக்த கோடிகளுக்கு தரிசனமும் தந்திருக்கிறார் நித்தி.
.jpg)
இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. நான் கடவுள் ஆர்யாவுக்கே சவால் கொடுக்கும் வகையில் தலைவிரி கோலமாக நித்தி ஆடும் ஆட்டம் பதற வைக்கிறது. இணைய குறும்பர்கள் ‘டேய் நீதான் அந்த மணியாட்டி சாமியாரா?” என்று கலாய்க்க, சிலரோ ‘புலித்தோலை போர்த்துனா சிக்கலாகுமுன்னு சொல்லி பயபுள்ள சிறுத்தை தோலை போர்த்தி நிக்குது. இவன உள்ள பிடிச்சு போடுங்க சார்.’ என்று தெறிக்கவிட்டுள்ளனர் விமர்சனத்தை.
சுனாமியையே பார்த்துவிட்ட நித்தி இந்த சுனா பானாவுக்கெல்லாம் பயப்படுவாரா?
