Asianet News TamilAsianet News Tamil

ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் - டிடிவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை...!

supreme court warned to ttv dinakaran about anniya selavani case
supreme court warned to ttv dinakaran about anniya selavani case
Author
First Published Sep 4, 2017, 1:26 PM IST


அந்நிய செலாவணி மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்று செயலுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தது.

இதுகுறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனை விடுவித்தது. ஆனால், கீழமை நீதிமன்றங்களின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரனை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று செயலுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios