பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை தொடர்பான இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால் அவற்றை கரைக்கும் போது, நீர் நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி போலீசார் மறுக்கின்றனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. எனவே, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.
அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா எல்1: இஸ்ரோ தகவல்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு தடை விதித்தது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்பது சரியே என உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.