supports increases for ops meeting to support ops

அனைத்து பக்கமும் ஒபிஎஸ்-க்கு ஆதரவு பெருகுவதைப் போல, மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை அதிமுக நிர்வாகிகள், ஒபிஎஸ்-ஸின் கரத்தை வலுப்படுத்து ஆதரவு அளித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ம.முத்துராமலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் என்.சி.கே.முத்துகிருஷ்ணன் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர்,
வி.பஞ்சுவனராஜ் வண்டியூர் பகுதி கழக மகளிரணி செயலாளர், பூமா நடராஜன் மாவட்ட மகளிரணி பொருளாளர், எ.ரெங்கசாமி வண்டியூர் பகுதி இலக்கிய அணி செயலாளர்,
எ.செல்லபாண்டி அம்மா பேரவை செயலாளர் வண்டியூர் பகுதி, கே.மோகன் எம்.ஜி.ஆர் இளைஞரணி, கே.செல்வராஜ் சுதந்திர நகர் கிளை பிரதிநிதி, எஸ்.நாகராஜ் வண்டியூர் பகுதி கழக பொருளாளர், வி,முத்து காந்தி நகர் கிளை செயலாளர், ராகவன் பாரதி நகர் கிளை செயலாளர், டி.ராஜேந்திரன் பாரதி நகர் கிளை துணை செயலாளர், எம்.பாண்டி அண்ணாநகர் அம்மா பேரவை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை:

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், உண்மை தொண்டனாக ஒ.பன்னீர்செல்வம் நடந்துக் கொண்டார். தமிழகத்தில் தற்போது நடக்கும் அராஜக அரசியலுக்கு முடிவு கொண்டுவரவும், ஜெயலலிதாவின் விருப்பப்படி மக்களின் நலனுக்கான ஒரு அரசை நிறுவ வேண்டும். அதற்கு, ஒபிஎஸ்-ஸின் கரம் வலுப்படுத்த வேண்டும்.

என்று மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை நிர்வாகிகளால் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.