முடிந்தது கோடை விடுமுறை : இன்று முதல் முழு அளவில் செயல்படும் உயர் நீதிமன்றம்!

ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் முழு அளவில் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுகிறது

Summer holiday finished madras high court to function fully ffrom today onwards

உச்ச நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றங்களுக்கு கோடை காலத்தில் கோடை விடுமுறை விடப்படுவதுண்டு. அந்த வகையில்,  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு  மே 2ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இருப்பினும், அவசர வழக்குகளை விசாரிப்பதற்கு விடுமுறை கால அமர்வும் அமைக்கப்படும். 

அதன்படி, அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3ஆவது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4ஆவது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டு அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

Exit Polls Results 2024 எதிரொலி: பங்குச்சந்தையில் காளைகள் குதியாட்டம்!

இந்த நிலையில், ,  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் முழு அளவில் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இன்று முதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.

முதல் அமர்வில் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக், 2ஆவது அமர்வில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு, 3ஆவது அமர்வில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார், 4ஆவது அமர்வில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல், 5ஆவது அமர்வில் நீதிபதிகள் எம்.சுந்தர், கே.கோவிந்தராஜன் திலகவதி, 6ஆவது அமர்வில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, பி.தனபால், 7ஆவது அமர்வில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன், 8ஆவது அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோரும், நீதிபதிகள் அனிதா சுமந்த், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 27 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios