திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்தது. 

80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டான்.   பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மணப்பாறை அரசு  மருத்துவமனையில் உடற்கூறாய்வு  நடைபெற்றது.  உடற்கூறாய்வுக்கு பின் சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைத்து, குழந்தை சுஜித் உடலுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சுஜித்தின் உடல் , நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.