Asianet News TamilAsianet News Tamil

"என்னோட ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க" பாடகி சுசித்ரா புகார்...

Suchithra complaint For hacked her twitter account
suchithra complaint-for-hacked-her-twitter-account
Author
First Published May 13, 2017, 3:05 PM IST


திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா  தன்னுடைய ட்விட்டர் மற்றும்  ஃபேஸ்புக்கை முடக்கியதாக சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகாவின் லீலை என்ற பெயரில் அவர்களின் கசமுசா புகைப்படங்களை தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். கடந்த மார்ச் மாதம் முழுவதும் சூச்சி லீக்ஸ் என்ற ஹாஷ் டேக் போட்டு சமூகவலை தளங்களில் வலம் வந்தது.

இந்த சுச்சீ லீக்சில் தனுஷின் மன்மத லீலை, விஜே டிடியின் லீலை, அனிருத் லீலைகள் என லிஸ்ட் நீண்டுகொண்டே போனது.. முதலில் தனுஷ் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.  பின்னர் ஹன்சிகாவின் லீலை என்று கூறி அவர் யாரையோ கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை போட்டார். அடுத்ததாக அனிருத் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் சுசித்ரா.

முதலில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது, மறுநாளே அதே கணக்கிலிருந்து ட்விட் வந்தது. மறுபடியும் அவரது ட்விட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டதாக கூறினார். அதைப்பின் மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அவரது ட்விட்டரில் வெளிவந்தது. இதனால் அவரது ட்விட்டர் கணக்கு அழிக்கப்பட்டது. அதன் பிறகும் அவரது பேரில் ஒரு ட்விட்டர் கணக்கு உள்ளது. அது யாரால் இயக்கப்படுகிறது என்று சரியாக தெரியவில்லை என சுசியின் கணவர் கார்த்தி தெரிவித்தார்.

இதனையடுத்து, சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 'சுசித்ரா மன அழுத்தில் உள்ளார். அவரை அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அவர் குற்றம் சாட்டிய பிரபலங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

இந்தனை தெடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக ட்விட்டர் பேஸ்புக் பக்கமே வராத சுசி தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

suchithra complaint-for-hacked-her-twitter-account

இந்த மனுவில், தனது முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கம் சிலரால் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் யாரோ விஷமிகள் ட்விட் செய்துள்ளார்கள். இதனால் தன்னுடைய ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு 40 முதல் 50 தற்காலிகமாக கணக்கை தொடக்கி  லீலை மற்றும் சுச்சீ லீக்ஸ் என்ற ஹாஷ் டேக்குடன் சில விஷமிகள் தன்னுடைய பெயரை கெடுப்பதற்காகவே இந்தவேலையை செய்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, தனது ஈமெயிலிலிருந்து பிரபல நடிகர்களுக்கு தன்னுடைய கையெழுத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவை தரக்குறைவான வார்த்தைகளுடன் அனுப்பியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறு தனக்கு நீதி கிடைக்கவேண்டுமென்று புகாரில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios