sub-inspector attacked by who sleep in addictive

திருவள்ளூர்

திருவள்ளூரில், குடிபோதையில் காவல் நிலையத்தின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பிய உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கியவரை காவலாளர்கள் கைது செய்தனர். தாக்கியவர் குடிபோதை தலைக்கேறிய நிலையில் இருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, நாகராஜ் என்பவர் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று காலையில் பணியில் இருந்தபோது, காவல் நிலையத்திற்கு வந்த ஒருவர் நுழைவு வாயிலில் தூங்கிக் கொண்டாராம். இதனை பார்த்த நாகராஜ், "இங்கெல்லாம் படுக்க கூடாது" என்று கூறி அவரை எழுப்பியுள்ளார்.

அப்போது, அந்த நபர் நாகராஜை சரமாரியாக அடித்துவிட்டாராம். இதுகுறித்து, நாகராஜ் அளித்த புகாரின்பேரில், திருத்தணி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், உதவி ஆய்வாளரை அடித்தவர், சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த ஏசு(46) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, திருத்தணி காவலாளர்கள் ஏசுவை கைது செய்தனர்.