- Home
- Tamil Nadu News
- ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழைக்கான அறிகுறியே இல்லை. தமிழகம் முழுவதும் பகலில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இரவிலும் அதிகாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மழை எப்போது பெய்யும்? என மக்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் இருக்கும்
வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18ம் தேதி (இன்று) முதல் 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை நிலவும்
21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23ம் தேதி கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

