NEET exam impact on rural students : அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியால் கொண்டுவரப்பட்ட 7.5% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

7.5 reservation for medical students in Tamil Nadu : தமிழ்நாட்டில் நீட் தேர்வு 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, மாணவர்கள் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை மாற்றி, இந்த மத்திய அரசின் ஒற்றைத் தேர்வு முறை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.. இதன் காரணமாக மருத்து படிப்பில் இணைய முடியாமல் கிராம்ப்புற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நீட் தேர்வு - தமிழகத்தில் மருத்துவ படிப்பு

இதன் காரணமாக ஏழ்மை மற்றும் கிராம்ப்புற மாணவர்களால் அதிகளவில் பணம் கட்டி கோச்சிங் கிளாஸ் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே தமிழக அரசு சார்பாக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமசோதா கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எந்தவித முடிவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தான் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு முடிவை அறிவித்தார்.

7.5% ஒதுக்கீடு- ஒரே வீட்டில் 3 பேர் மருத்துவர்கள்

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவ படிப்பில் படித்து வருகிறார்கள். அந்த வகையில் 7.5% இட ஒதுக்கீடு காராணமாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் 3 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்தில் கை தட்டி மகிழ்ந்து அந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.