12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கடந்தமார்ச் 13-ம்தேதிதொடங்கிய 12-ம்வகுப்புஏப்ரல் 3 வரைநடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிமாணவர்கள்உள்ளிட்ட 8.17 லட்சம்மாணவர்கள்இந்ததேர்வைஎழுதினர். வினாத்தாள்திருத்தும்பணிகள்மாநிலம்முழுவதும் 79 மையங்களில்ஏப்ரல் 10 முதல் 21 வரைநடைபெற்றது. 12-ம்வகுப்புதேர்வுமுடிவுகள்மே 5-ம்தேதிவெளியாகும்என்றுமுதலில்அறிவிக்கப்பட்டது. ஆனால்நீட்தேர்வுமே 7-ம்தேதிநடந்ததால்மாணவர்களின்நலன்கருதிதேர்வுமுடிவுகள்வெளியாகும்தேதிமாற்றப்பட்டுமே 8-ல்தேர்வுமுடிவுகள்வெளியாகும்என்றுஅறிவிக்கப்பட்டது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி 8,03,385 தேர்வர்கள்தேர்வுஎழுதியதில் 7,55,451 பேர்தேர்ச்சிபெற்றனர். மாணவர்களின்தேர்ச்சிவிகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சிபெற்றுள்ளனர். அதாவதுமாணவர்களைவிடமாணவிகள் 4.93% பேர்தேர்ச்சிபெற்றுள்ளனர். 97.85% தேர்ச்சிசதவீதத்துடன்விருதநகர்மாவட்டம்முதலிடம்பிடித்துள்ளது. அதேநேரம் 86.69% தேர்ச்சிவிகிதத்துடன்கிருஷ்ணகிரிமாவட்டம்கடைசிஇடத்தில்உள்ளது

இதையும் படிங்க : TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?

கடந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் 93.76% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 94.03% ஆக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழில் 2 மாணவர்களும், ஆங்கிலத்தில் 15 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போல் இயற்பியலில் 812 மாணவர்களும், வேதியியலில் 3,909 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியலில் 1490 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4,618 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனினும் இதில் 47,934 பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஒரு சிலர் ஒரு பாடங்கள், ஒரு சிலர் 2 அல்லது 3 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து, துணை தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வி தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த விருதுநகர்! கடைசி இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?