பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி பீர் பாட்டிலோடு பர்த் டே கொண்டாடிய மாணவிகள்..! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் மது பழக்கம்
மாணவ, மாணவிகள் சமூக வலைதளத்தால் ஒரு பக்கம் சீரழிந்து வரும் நிலையில் மறு பக்கம் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். முன்பு மது குடிப்பவர்களை ஊரு விட்டு ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் தற்போது உள்ள காலத்தில் மது குடிக்காதவர்களை தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்ததளவிற்கு மதுபான விநியோகம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மது குடிப்பதை பந்தாவாக இன்றைய இளம் சமுதாயத்தினர் நினைக்கும் நிலையும் உள்ளது. அந்த அளவிற்கு மது குடிப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதற்கு எடுத்துக்கட்டாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்கள் மது குடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.
வகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள்
ஆனால் தற்போது மாணவிகளே பள்ளி வகுப்பறையில் மது குடித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த மாதம் 16-ந்தேதி பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது மாணவிகள் தங்களது தோழியை சந்தோசம் படுத்த கேக், கூல் டிரிங்க்ஸ், தின்பண்டங்கள் வாங்கியுள்ளனர். அதோடு சேர்த்து பீர் பாட்டில்களையும் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மதிய உணவு இடைவேளையின் போது யாரும் இல்லாத சமயத்தில் 7 மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடி பீரை குடித்துள்ளனர். தொடர்ந்து மது போதையில் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர். அந்த சமயத்தில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள், மாணவிகள் கொண்டாட்டம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவி தற்கொலை முயற்சி
சம்பந்தப்பட்ட 7 மாணவிகளையும் அழைத்து கண்டித்த தலைமை ஆசிரியர் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், 7 மாணவிகளையும் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவி ஒருவர் வீட்டில் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இதையும் படியுங்கள்