Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் வேலையெல்லாம் செய்யக்கூடாது.. வேணுமென்றால் பணியாளர்களை போடுங்கள்.. காட்டமான உத்தரவு

ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

students should not be involved in cleaning campus - School Education Department
Author
Tamil Nadu, First Published Aug 20, 2022, 1:15 PM IST

வட கிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் மழைக் காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.  இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டிட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது. மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள்/சருகுகளை அகற்றிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை..?

ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.

பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. பள்ளி பராமரிப்பு மான்யத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள் / பணியாளர்களைக் கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:நள்ளிரவில் செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து..! மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்..!

பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்கள் அனுமதிப் பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios