பி.இ., பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.இ., பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் வரும் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதை அடுத்து கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கிவிட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ஃபார்முலா- மு.க.ஸ்டாலின்
அதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் சேர விரும்பும் மாணவர்கள் மற்ற்றும் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு நாளை முதல் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை அருகே பயங்கரம்.. அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் பலி..
பட்டபடிப்பு குறித்து கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ரூ.250 பதிவுக் கட்டணமாகவும் இதர வகுப்பினர் அனைவரும் ரூ.500 பதிவுக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
