திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக தேர்வுக்கு படித்துச் கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  தவசி  கிராமத்தில் இலங்கை  தமிழர்களுக்கான  முகாம் உள்ளது.  இந்த முகாமை சேர்ந்த  மல்லிகா என்ற 17 வயது மாணவி,  இந்த ஆண்டு  பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார்.  

ஆனால் மல்லிகா தேர்ச்சி பெறாததால் மறு தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு செய்யாறு சத்திய மூர்த்தி தெருவில் கணவருடன் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கி டியூசன் படித்து வந்தார்.

இந்நிலையில்  மல்லிகாவின் கசோதரி மற்றும் அவரது கணவர் இருவரும வேலைக்கு சென்றுவிட்டனர். மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து படித்துக் கொண்டிருந்தார்..

இதை அறிந்த  இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த உதயன்  என்பவர் திடீரென மல்லிகா இருந்த வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார். பின்னர் அவர்  மல்லிகாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மல்லிகா தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் கேட்காத உதயன் அவரை கற்பழித்துவிட்டு இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அவரை  மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.

மாலையில் வீடு திரும்பிய தனது சகோதரியிடம் மல்லிகா  தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார்.  இதையடுத்து அவர்கள் து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் உதயன் மீது  புகார் அளித்தனர்.

இதையடுத்து முகாமுக்குள் பதுங்கியிருந்த உதயனை போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.