கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர் குபேரன் இன்று ஜாமினி விடுவிக்கப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக படித்து வருபவர் குபேரன்.

இவர் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 20 -ம் தேதி கதிராமங்கலத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிட கோரியும் , பேராசிரியர் ஜெயராமன், விடுதலைசுடர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும்என வலியுறுத்தியும் தனது முகநூல் பக்கத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதைதொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் குபேரனை மிரட்டி போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர படுத்தி சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில், குபேரன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.