நாகப்பட்டினம்

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அதன் தலைவர் வி.வி. ராஜா தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட த் துணைத் தலைவர்கள் குணசுந்தரி, மார்க்ஸ், மாவட்டப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

“மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப்  பெற வேண்டும்

பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த  போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.