ஒரே நாடு, ஒரே ரேஷன்.. பொருட்களை கொடுக்கல அவ்ளோதான் - தமிழக அரசு எச்சரிக்கை

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

Strict action will be taken if goods are refused under One Country One Ration Card scheme

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, பதிவாளர் சண்முக சுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக். 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்க வேண்டும்.

அவ்வாறு விநியோகிக்கப்படும்போது, வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையை வசூலிக்க வேண்டும். புலம் பெயர்ந்து வந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

Strict action will be taken if goods are refused under One Country One Ration Card scheme

இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்

எனவே, சம்பந்தப்பட்ட அலு வலர்கள் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பைக் கண்காணித்து, போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டுதிட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் மற்றும் பதிவாளரால் தக்க அறிவுரை வழங்கப்பட்ட பின்னரும், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும், அதைக் கண்காணிக்கத் தவறியதையும் இது சுட்டிக் காட்டுகிறது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

Strict action will be taken if goods are refused under One Country One Ration Card scheme

எனவே, இந்த அறிவுரைகளை அனைத்து கீழ்நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்று பணியாளர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios