sterlite ceo spoke that they dont have any idea to move from thoothukudi

முடியாது....வாய்ப்பே இல்லை..! தூத்துகுடியிலிருந்து வெளியேற ஐடியாவே இல்லை...ஸ்டெர்லைட் நிர்வாகம்..!

13 பேரின் உயிரை பலி வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பதில் அளித்து உள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம்

அதாவது தூத்துக்குடியில் இருந்து வெளியேறுவது குறித்து தங்களுக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிறுவன தலைமை நிர்வாகி பி.ராம்நாத் , பிரபல தனியார் இதழுக்கு பேட்டி அளித்து உள்ளார்

அதில், " தற்போது பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டு உள்ளது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கிறது..மக்களின் போராட்டத்திற்கு பின் ஏதோ ஒரு தூண்டுதல் உள்ளது.

வெளி நாடுகளிலிருந்து தொண்டு நிருவனங்களுக்கு பணம் வருகிறது .இந்த பணத்தை வைத்து மக்களை திசை திருப்பி விடுகின்றனர்.

 இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து உள்ளோம் , அதே சமயத்தில் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்