நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் தவிர வேறு யாருடைய படங்களும் சிலைகளும் வைக்கப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Statues and portraits of Ambedkar must be present in court premises: Annamalai

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் தவிர வேறு தலைவர்களின் படங்களும் சிலைகளும் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் மற்றும் வழக்கறிஞர் சங்க மூத்த தலைவர்களின் படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கத்தினர் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரினர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சார்பில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், நீதிமன்றங்களில் காந்தி, வள்ளுவர் தவிர யாருடைய படமும் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

போதையில் ரகளை செய்தவரை பிடித்து ஷூவால் மண்டையிலேயே அடிக்கும் போலீஸ்! வைரலாகும் கொடூரக் காட்சி!

இதற்கு விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசிக சார்பில் இதனை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம் நடந்ததப்படும் எனவும் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 

அண்டை மாநிலங்களுக்கும் பரவும் மணிப்பூர் பதற்றம்! மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி மக்கள்!

Statues and portraits of Ambedkar must be present in court premises: Annamalai

அதன்படி, நீதிமன்றங்களில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைகளையும்,  உருவப் படங்களையும் நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் சென்னை ஆலந்தூர் புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் படத்தை நீக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிய வருகிறது. 

நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தான் நீதிமன்றங்களின் முக்கியக் கடமை. அப்படிப்பட்ட நீதிமன்றங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ இடம்பெறுவது அவருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

எனவே, நீதிமன்ற வளாகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளும் உருவப்படங்களும் நிச்சயமாக இடம்பெற வேண்டும். உயர் நீதிமன்றம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், அண்ணல் அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களிடம், பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டி! மநீம துணைத் தலைவர் தங்கவேலு பேட்டி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios