பேரறிவாளன் , முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறேன். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக அமைச்சரவை கூட்டி, அவர்களை விடுதி செய்ய ஏற்பாடு  செய்ய வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 

ஏற்கனவே, கலைஞர் இது குறித்து அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்து உள்ளார், அதற்கேற்றவாறு அவரது கோரிக்கையின் அடிப்படையில், நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது உச்சநீதி மன்றம். மேலும், சட்டமன்றத்தில் முதன் முறையாக குட்கா விவகாரத்தில் நான் தான் கேள்வி எழுப்பினேன். அதற்காகவே தங்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்...

இது தொடர்பாக, விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைப்பெறு வருகிறது.. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் ஸ்டாலின் 


 
27 வருடங்களாக சிறையில் வாடி தவித்து கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.