Asianet News TamilAsianet News Tamil

MK STALIN : ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு.! ஸ்டாலினிடம் இருந்து சென்ற முக்கிய செய்தி

தமிழகம் -ஆந்திரா இடையேயான நட்பையும் கூட்டுறவையும்  வலுப்படுத்த ஆர்வமோடு காத்திருக்கிறேன் என ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Stalin congratulates Chandrababu Naidu on his inauguration as the Chief Minister of Andhra State KAK
Author
First Published Jun 12, 2024, 2:34 PM IST

பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தி மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து ஆட்சியை சந்திர பாபு நாயுடு பறித்துள்ளார். இந்தநிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதல்வரான பிறகு கண்கலங்கிய சந்திரபாபு நாயுடு.. கட்டியணைத்த பிரதமர் மோடி.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்!

Stalin congratulates Chandrababu Naidu on his inauguration as the Chief Minister of Andhra State KAK

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

இதே போல ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு. என்.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

 

உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டுவரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios